இந்தியா, மார்ச் 28 -- "ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?; இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?" என தவெக கட்சித் தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உட்பட 1,710 உறுப்பினர்கள் பங்கேற்றனர். விஜயின் பெற்றோர்கள் சோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க:- Annamalai vs Adhav Arjuna: 'அண்ணாமலையை திமுக விலைக்கு வாங்கிவிட்டது' தவெக பொதுக்...