இந்தியா, ஜனவரி 29 -- TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பனையூர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளோடு இன்று (ஜனவரி 29) ஆலோசனை நடத்துகிறார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், மதுரை, மயிலாடுதுறை, ஈரோடு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளை சந்திக்கும் விஜய், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியாக சந்தித்து நியமன ஆணைகளையும் வழங்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் இரண்டாம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மு...