இந்தியா, பிப்ரவரி 14 -- TVK Vijay: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டு இருக்கிறது. குறிப்பாக, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான் விஜய்க்கு இந்த y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு இருக்கும் அச்சுறுத்தலின் தன்மையைப் பொறுத்து எக்ஸ்(X), ஒய்(Y), ஒய்+(Y+), இஸட்(Z), இஸட் +(Z+), மற்றும் எஸ்.பி.ஜி(S.P.G) என ஆறுவகையான பாதுகாப்பு அரண்களை மத்திய உள்துறை அமைச்சகம் தருகிறது. Intelligence...