இந்தியா, பிப்ரவரி 17 -- மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யின் மகனின் கல்வித் தகுதியை சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்து உள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றால் மட்டுமே மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்து பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தவெக தலைவர் விஜய் ட்வீட் செய்து இருந்தார். அதில், மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்...