இந்தியா, ஜனவரி 26 -- குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசு தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அரசு அதிகாரிகள், பிரபலங்கள், சமூகசேவகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.

இந்த அண்டுக்கான ஆளுநர் உரையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து திமுக, விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன. தமிழ்நாடு அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலி...