இந்தியா, ஏப்ரல் 4 -- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு இன்று (03-04-2025) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்திய பின்னர், இந்த பாதுகாப்பு நடவடிக்கை அமலுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டது. இதில் பயிற்சி பெற்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், தமிழ்நாட்டிற்குள் மட்டும் இந்த பாதுகாப்பு பிரிவு விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் என செய்திகள் வெளியாகி இருந்தது.

விஜய்யின் தரப்பிலிருந்து 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கோரப்பட்ட நிலையில், இதற்க...