இந்தியா, ஜனவரி 30 -- TVK Vijay, Aadhav Arjuna: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அமைப்பின் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் புதன்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் பேசியதாகவும், இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட் ஆகியோர் உடனிருந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் மாநில துணை பொதுச்செயலாளர் அல்லது மாநில இணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதவ் அர்ஜுனாவின் இணைப்புக்கு பின்னர் மற்ற கட்சியில் இருந்து வருபவர்களை தமிழக வெற்றிக் கழகத்த...