இந்தியா, பிப்ரவரி 23 -- தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார் தளபதி விஜய்.

ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்பட போவதாக தெரிவித்தார். அத்துடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

கட்சியின் கொடி, கொள்கை குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அருகே பனையூரில் இருக்கும் கட்சியின் தலைமையகத்தில் கடந்த திங்கள...