இந்தியா, ஏப்ரல் 4 -- இஸ்லாமியர்களுக்கு எப்போதும் தமிழக வெற்றிக் கழகமும், தலைவர் அவர்களும் உறுதுணையாக இருப்பார்கள் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னை பனையூரில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பாக நடைபெற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் ஈ.சி.ஆர்.சரவணன் மற்றும் ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பொதுச் ...