இந்தியா, ஏப்ரல் 4 -- கச்சத்தீவு மீட்பில் இடைக்காலத் தீர்வு 99 வருடங்களுக்கான குத்தகை ஒப்பந்தமே என தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

கச்சத்தீவு மீட்பு மற்றும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு என்றும், அதுவரை இடைக்காலத் தீர்வாக 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"கச்சத்தீவு மீண்டும் இந்தியாவுக்கு சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு. அதுவரை, 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு எவ்வித சமரசமும் இன்றி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். மாண்புமிகு பிரதமர் திரு. நர...