இந்தியா, மார்ச் 28 -- தவெக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை "வருங்கால முதல்வர்" என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்தை "வருங்கால முதல்வர்" என்று குறிப்பிட்டு சென்னை ஈ.சி.ஆர். பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டர் தவெக கட்சியின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈ.சி.ஆர்.பி.சரவணன் பெயரில் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

தவெக...