இந்தியா, பிப்ரவரி 19 -- TVK Allaince : தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்ததாகவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கூட்டணியில் இணையும் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் கட்சி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. தவெக தலைவர் விஜய் அவர்களுடான சந்திப்பு பற்றி தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய் உடனான சந்திப்பு பற்றி தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா விளக்கமளித்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், " நேற்று த.வெ.க தலைவரும் நடிகருமான அன்பு சகோதரர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அரசியல் களத்திற்கு வ...