இந்தியா, ஜனவரி 31 -- நடிகர் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிடி.நிர்மல்குமார் ஆகியோர் இணைய உள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக தேர்தல் பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜூனா. விசிக தலைவர் திருமாவளவன் - தவெக தலைவர் விஜய் ஆகியோரை கொண்டு அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்காத நிலையில், புத்தக வெளியீட்டு விழாவில் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து ஆதவ் அர்ஜூனா பேசி இருந்தார். இதனால் ...