இந்தியா, பிப்ரவரி 11 -- சிறார் உட்பட தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தமிழக வெற்றி கழகத்தில் தீவிரம் அடைந்து உள்ளது. கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அணிகளை அமைக்கும் பணிகள் அக்கட்சியில் தீவிரம் பெற்று வருகின்றன. ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தில் 19 அணிகள் இருந்து வந்தது. இந்த நிலையில் கூடுதலாக 9 அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகள் அணி, உண்மை சரிபார்ப்பு அணி, இளம்பெண்கள் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி, தொழில் முனைவோர் அணி, காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுசூழல் அணி உள்ளிட்டவை கவனம் பெறக்கூடிய அணிகளாக உள்ளது.

Published by HT Digital Content...