இந்தியா, பிப்ரவரி 16 -- தினமும் நமது அன்றாட உணவில் சிட்டிகை அளவு சேர்க்கிறோம். இந்த மஞ்சளில் என்ன சத்துக்கள் உள்ளது என்று பாருங்கள். மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இந்தச் சத்துக்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடியவை. தலைமுடி மற்றும் சருமத்துக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது. சருமத்தை வெளிரச் செய்கிறது. பொடுகைத் தடுக்கிறது. தலைமுடி உதிர்வதைக் குறைக்கிறது. தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இயற்கையாகவே அழகைக் கொடுக்கக்கூடியது மஞ்சள். அதனால்தான் பெண்கள் மஞ்சளை முகத்துக்கு பூசிக்கொள்கிறார்கள்.

மஞ்சளில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி குணங்கள் உள்ளது. இது முகப்பருக்கள் மற்றும் சிவத்தலைக் குறைக்கிறது. வீக்கத்தைத் தடுத்து சருமத்தை தெளிவாகவும், ஆரோக...