இந்தியா, மார்ச் 27 -- இந்தியர்கள் மத்தியில் துளசி செடி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் உருவமாக துளசி பாவிக்கப்ப்டுகிறது. துளசியை வழிபட்டு அதில் தீபம் ஏற்றினால் வீட்டில் நேர்மறை ஆற்றலை பெறலாம் என்கிற நம்பிக்கை உள்ளது.

துளசியில் மருத்துவ குணங்கள் ஏராளமாக நிறைந்திருப்பதுடன், இந்துக்களால் வழிபாட்டிலும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் துளசி செடியை மாடத்தில் அமைத்த பலரும் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

துளசி செடி பச்சை நிறத்தில் இருந்தால் அந்த குடும்பம் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் வீட்டில் இருக்கும் துளசி செடி பச்சையாக இல்லாமலும், அடிக்கடி காய்ந்து போனாலும், செடி சரியாக வளராமல் இருந்தாலும், ஏதோ அமங்கள விஷயத்தின் அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். துளிசி செடியை காய விடக்கூடாது. அதேப...