இந்தியா, பிப்ரவரி 11 -- Trisha Krishnan: நடிகை த்ரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது.

நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் எக்ஸ் தளத்தில் இருந்து திடீரென்று சம்பந்தமில்லாத பதிவுகள் வெளியாகின. ஆனால், உடனே அவை டெலிட் செய்யப்பட்டு விட்டன. இந்த பதிவு நீக்க நடவடிக்கைகளை த்ரிஷாவின் பர்சனல் குழு செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா இது குறித்தான விளக்கத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், ' என்னுடைய எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டது. கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை, அந்த ஐடியில் இருந்து வெளியாகும் கருத்துக்கள் என்னிடம் இருந்து வந்தவையல்ல. நன்றி' என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க: ...