இந்தியா, ஏப்ரல் 21 -- கடந்த சில மாதங்களாகவே தமிழில் சொல்லிக்கொள்ளும் விதமாக பெரிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை. இதனால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் வேலையில் கோலிவுட்டினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் ரீ-ரிலீஸாக தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான கில்லி, நேற்று வெளியாகியுள்ளது.

இதையடுத்து கில்லி ரீ-ரிலீஸ் குறித்து நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாவில், கில்லி பட புகைப்படங்கள், கில்லி படத்தின் காட்சியில் தனது நடன காட்சி வரும்போது, ரசிகர்கள்கள் வைப் ஏத்தும் விதமாக திரையரங்கில் டான்ஸ் ஆடிய காட்சியை பகிர்ந்து, "வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு இதன் மூலம் தெரியுது. முதல் நாள் முதல் காட்சிக்காக எழுந்து பிளாக்பஸ்டர் வைப் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. 2004 முதல் 2024 வரை" என ஹார்ட் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார்....