இந்தியா, பிப்ரவரி 7 -- அஜித்குமார் - த்ரிஷா ஐந்தாவது முறையாக ஜோடி சேர்ந்து படம் விடாமுயற்சி. மகிழ் திருமேணி இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகள் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார். 1997இல் வெளியான ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவலாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. அத்துடன் மற்றொரு ஹாலிவுட் படம் லாஸ்ட் சீன் அலைவ் என்ற படத்தின் சில காட்சிகளும் பட்டி டிங்கரிங் செய்திருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.

இந்த படத்தில் கணவன் - மனைவியாக அஜித் - த்ரிஷா வரும் நிலையில், அஜித்திடம், த்ரிஷா விவாகரத்து கேட்பார். இதற்கு அர்ஜுன் உதவியை அவர் நாடியிருப்பது தெரிய வரும். இதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்ய தி...