இந்தியா, மார்ச் 22 -- Toxic: நடிகர் யாஷ் நடிக்கும் "டாக்சிக்'' திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்"(Toxic - A Fairy Tale for Grown-Ups).

வரும் 2026ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி, உலகமெங்கும் டாக்சிக் படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உகாதி, சைத்ரா நவராத்திரி ஆகியப் பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை நாட்களில், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு, அடுத்த ஆண்டு, மார்ச் 20/21ஆம் தேதி ரமலான் பண்டிகையும் வர இரு...