இந்தியா, பிப்ரவரி 3 -- சினிமா மல்டி ஸ்டார் காஸ்டிங் என்பது தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளது. குறிப்பாக ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோவுக்கு வில்லனாக கூட நடிக்கும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் படத்தின் பிசினஸை அதிகரிக்கும் விதமாக பல ஸ்டார்களை ஒரே படத்தில் நடிக்க வைக்கவும் செய்கிறார்கள்.

அந்த வகையின் கன்னட சினிமாவில் ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில், யாரெல்லாம் நடிக்கிறார் என்கிற தகவலை படக்குழுவினர் வெளிப்படுத்தாமலே இருந்து வந்தார்.

இதையடுத்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தில் நயன்தாரா, பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, ஹூமா குரோஷி, தாரா சுதாரியா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் உலா வந்தன. ...