இந்தியா, பிப்ரவரி 13 -- இந்த மாதம் முதல் வாரத்தில் வெளியான அஜித்தின் விடாமுயற்சி, தாண்டேல் ஆகிய பாடங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு 2கே லவ் ஸ்டோரி, ஃபயர், தினசரி, படாவா ஆகிய புதிய படங்கள் வெளயாக இருக்கின்றன. இதற்கிடையே இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

நியூயார்க்கின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ், இந்திய அளவில் பிரபலமான டாப் 30 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2025ஆம் வருடத்துக்கான 30 வயது குறைவான பிரபலங்களில் பொழுதுபோக்கு பிரிவில் அபர்ணா பாலமுரளி இடம்பிடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி கடந்த ஆண்டில் தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் மலையாளத்தில் கிஷ்கிந்தா காண்டம், ருத்ரம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

உத்தர பிரதேசம் ம...