இந்தியா, பிப்ரவரி 10 -- அஜித்குமாரின் விடாமுயற்சி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படத்தின் வசூலும் ரூ. 100 கோடிக்கு மேல் தாண்டியுள்ளது. அதேபோல் நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்திருக்கும் தாண்டேல் படத்தின் வசூலும் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே இன்றையை டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்

ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரேமேஸ்வரன், கயாடு லோஹர், சிநேகா, கெளதம் மேனன், மிஷ்கின் உள்பட பலரும் நடித்திருக்கும் ரெமாண்டிக் காமெடி படம் ட்ராகன் ட்ரெய்லர். பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர், தெலுங்கு ஹீரோ ஜுனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா படத்தில் நடித்ததன் மூலம்...