இந்தியா, ஏப்ரல் 14 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் பொதுமக்கள் வழிபாடு நடத்தினார். காஞ்சி காமாட்சி அம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விசைப்படகு மீனவர்களுக்கு இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வ...