இந்தியா, ஏப்ரல் 10 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். பாஜக மாநிலத் தலைவர் நியமனம். கூட்டணி, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் அலுவலக்த்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய 74 மணி நேர சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமுன் வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்தர மறுத்து உள்ள நிலையில், இந்த விலக்கை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி; மக்களிடமும், ...