இந்தியா, ஏப்ரல் 11 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து உள்ள அமித்ஷா, சென்னை ஐடிசி ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.

தமிழ்நாடு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு "ஆண்டவனுக்கே வெளிச்சம்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில்.

பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று மாலைக்குள் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு.

திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

திருப்பூர் மாவட்டம் பல்ல...