இந்தியா, ஏப்ரல் 15 -- ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம், திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 நியூஸ் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

பகுஜன் சமாஜ் (BSP) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தைக் கவனித்து கொள்ளவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் வகையில் பதவியிலிருந்து அவரை நீக்கம் செய்வதாக அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் சமாஜ் ராஜாராம் அறிவித்துள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் மீது அண்மையில் பொற்கொடி புகார் கூறியிருந்த நிலையில் பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்....