இந்தியா, ஏப்ரல் 12 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று வெளியாக உள்ளது. புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாக வாய்ப்பு.

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசிதழில் 10 மசோதாக்களும் சட்டமானதாக அறிவிப்பு. 10 மசோதாக்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவ. 2023 தேதியில் ஆளுந...