இந்தியா, பிப்ரவரி 14 -- TOP 10 NEWS: தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ:-

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு தமிழ்நாட்டிற்குள் மட்டும் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வைர நகைகள் தமிழ்நாடு அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி 1000 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம், ஈரோடு, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, நெல்லை, தஞ்சாவூர் ம...