இந்தியா, பிப்ரவரி 17 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜராக கோரி ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

திமிராக பேசினால் தமிழர்கள் தனிக்குணத்தை பார்க்க நேரிடும். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதி தரப்படும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என வேலூரில் நடந்த அதிமுக மாநாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

திருவாரூரில் ஆதியன் பழங்குடி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 20 நாட்களாக பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் ...