இந்தியா, பிப்ரவரி 15 -- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள் பாஜக அறிக்கையை போல் இருக்கின்றன, ஈபிஎஸ் குரலே பாஜகவின் 'டப்பிங்' குரல்தான் என முதலலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முழுவதும் புறக்கணித்து உள்ளனர். சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை. பெயரையும் சொல்வது இல்லை. சிறப்பாக தமிழ்நாடு செயல்படுவதாக புள்ளி விவரங்களுடன் மத்திய அரசே அறிக்கை வெளியிடுகிறது. மத்தியில் உள்ளவர்களுக்கு மனசாட்சி உள்ளதா என கேட்கத் தோன்றுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைக்கிறார்.

மயிலாடுதுறை அருகே முட்டம...