இந்தியா, பிப்ரவரி 13 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள். என்னை வாழவைத்தவர்கள் ஜெயலலிதாவும், எம்ஜியாரும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு.

பாஜக தலைவராக தொடர முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால் நான் இங்கு இருந்து செலும் போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விடமாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு.

10 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி மக்கள் மருந்தகங்களை திறந்தார். இதைவிட காப்பி அடிக்கிற முதல்வரை இந்தியாவிலேயே பார்க்க முடியாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்.

திருப்பூரில் மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் சுந்தரவடிவேல் ...