இந்தியா, பிப்ரவரி 10 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் திருவுருவப்படங்களை இல்லை என்பதால் ஈபிஎஸ்க்கு நடந்த அதிக்கடவு- அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயில் அர்ச்சகர்கள் தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டு உள்ளது. தட்டுக் காணிக்கை கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கும் நடைமுறையில் இருக்கிறது. அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம்.

திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்த புகார் தொடர்பாக ஏ.ஆர்.நிறுவன தலைவர் ராஜசேகர், வைஷ்ணவி டெய்ரி விறுவனத்தின் அபூர்வா சவ்தா,...