இந்தியா, பிப்ரவரி 1 -- திருச்சி அருகே ஆம்னி பேருந்து விபத்து, ஈசிஆர் சம்பவத்தில் முக்கிய குற்றாவாளி கைது, தங்கம் விலை உயர்வு, மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இன்றைய காலை பொழுது டாப் 10 செய்தி தொகுப்பில் உள்ளன

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளத்தில் பாய்ந்த தனியார் ஆம்னி பேருந்து, மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்திருக்கும் நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற இந்த ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கி 12 பேர் படுகாயமைடந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்திய வழக்கில் கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதி...