Hyderabad, ஜனவரி 28 -- பலர் குளியலறையில் இருக்கும் பற்பசையை (Toothpaste) ஏதேனும் தீக்காயம் ஏறப்பட்டாலோ அல்லது சூடான பொருளை தொட்டாலோ உடனடியாக அந்த தீக்காயத்தின் மீது தடவுகின்றனர். இது ஒரு உடனடி வீட்டு வைத்தியமாக பார்க்கப்படுகிறது. நீங்களோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களோ இதை செய்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வது நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் மட்டுமல்ல, நூறு பேரில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் எரிந்தகாயத்தில் பற்பசையைப் பயன்படுத்தி தவறு செய்கிறார்கள். பற்பசை அந்த காயத்தை குளிர்ச்சியடைய வைத்து வீக்கம் மற்றும் வலியை நீக்குகிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒரு மாயை. ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி, சுகாதார பயிற்சியாளர் ப்ரீத்தி ஷா, தீயினால் ஏற்பட்ட காயத்திற்கு ஏன் பற்பசையைப் பயன்படுத்தக்கூடாத...