இந்தியா, பிப்ரவரி 17 -- பெரிய அலுவலகங்களில் பார்க்கும் பெரிய பணிகளை விட மிகவும் சிக்கலான காரியம் என்றால் நாம் வீட்டில் சமைப்பது தான். வழக்கமான சமையல் செய்தால் சாப்பிடுபவர்களுக்கு போர் அடித்து விடும். இது போன்ற நேரங்களில் நாம் வித்தியாசமாகவோ, அதிக சுவை அளிக்க கூடிய உணவுகளையோ செய்ய வேண்டும். இதற்கு தான் ஒரு சூப்பரான ரெசிபியை கொண்டு வந்துள்ளோம். நாம் வழக்கமாக செய்யும் தக்காளி சாதத்தினை குக்கரில் செய்வோம். இது சலிப்பை ஏற்படுத்தலாம். குக்கர் இல்லாமல், தக்காளி தோல் வராமல் மாறுபட்ட முறையில் தக்காளி சாதம் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம்.

1 கப் பாசுமதி அரிசி

6 தக்காளி

2 பெரிய வெங்காயம்

4 பச்சை மிளகாய்

சிறிதளவு கறிவேப்பில்லை

அரை டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் உளுந்து

1 பட்டை

அரை டீஸ்பூன் சோம்பு ...