இந்தியா, ஏப்ரல் 30 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் தெளிவான முடிவு பிறக்கும். தொழில் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உயர்வு நிறைந்த நாள்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வெளியூர் வர்த்தகம் தொடர்பான உதவிகள் மேம்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சிறந்த செயல்பாடுகளால் நன்மதிப்பு உண்டாகும். கவலை விலகும் நாள்.

மிதுனம்

புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்கா...