இந்தியா, மார்ச் 25 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும்.மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூல...