இந்தியா, ஏப்ரல் 22 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலை குறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

ரிஷபம்

திட்டமிட்ட சில பணிகளில் தாமதம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் விவேகம் வேண்டும்.

மிதுனம...