இந்தியா, ஏப்ரல் 17 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

குழந்தைகளின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் உண்டாகும். மறைமுகமான சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் ஆரோக்கியம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

கவலைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வா...