இந்தியா, ஏப்ரல் 6 -- ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் தெளிவு ஏற்படும். ரகசியமான சில முதலீடுகளால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.

ரிஷப ராசியினரே இன்று நீங்கள் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்...