இந்தியா, ஜூன் 3 -- சென்னையில் இன்று (ஜூன் 3) பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து 378ஆவது நாளாக அதே விலையில் விற்கப்படுகிறது. சென்னையில் இன்று (ஜூன் 3) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை விலை மாற்றமின்றி இருந்து வருவதால் மேற்கூறிய பொருள்களிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பொருத்தவரை மாநிலங்களுக்கு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு மாவட்டங்கள் சிறிய அளவிலான மாற்றம் ஏற்படும். பெட்ரோல் இறக்குமதியை சார்ந்து தான் இந்தியா உள்ளது

இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக...