இந்தியா, மார்ச் 7 -- Today OTT Release: இனிமையான காதல், தேசபக்தி, சூப்பர் ஹீரோ, குடும்ப டிராமா, திகில் என இந்த வாரத்தின் டிஜிட்டல் வெளியீடுகள் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5, சோனி லைவ் என இன்று மார்ச் 7 ஆம் தேதி வெளியான படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

தமிழ் காமெடி டிராமா திரைப்படம் குடும்பஸ்தன். மணிகண்டன் நடிப்பில் உருவான இந்த ஃபேமிலி டிராமா படம் மார்ச் 7 ஆம் தேதியான இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளது. இப்படத்தில் மணிகண்டனுடன், குரு சோமசுந்தரம், சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜேஸ்வர் காளிஸ்வாமி இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம், மக்களிடம் நல்ல ...