இந்தியா, ஏப்ரல் 15 -- உலகின் மிகப் பெரிய கப்பலாக அறியப்பட்ட டைட்டானிக் தனது பயணத்தை தொடங்கி நான்காவது நாளில் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியதில் ஏராளமான எண்ணிக்கையிலான நபர்கள் பலியானார்கள். பல்வேறு பிரபலமானவர்கள், கப்பல் கட்டிட கலைஞர்கள் உள்பட பலரும் உயிழிந்தனர்.

ஏப்ரல் 15ஆம் தேதி தான் டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. இந்த நாள் டைட்டானிக் நினைவுநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் குறிப்பிடத்தக்க கடல் பயணத்தின் வரலாற்றைப் பற்றியும், அதில் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்ந்தும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 112வது நினைவு நாளாக இருந்து வருகிறது. 1912, ஏப்ரல் 15 உலகையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் நிகழ்ந்தது. தனது முதல் பயணத்தில் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கிய கப்பலில் பயணித்தவர்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்...