இந்தியா, பிப்ரவரி 19 -- திருப்பூரில் கத்தி முனையில் மிரட்டி வட மாநில பெண்ணை கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் மூன்று வட மாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தனது கணவன் உடன் கோயம்புத்தூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்துள்ளனர். பின்னர் அங்கு வேலை பிடிக்க வில்லை என்று அந்த தம்பதி மீண்டும் தங்கள் சொந்த ஊரான ஒடிசா மாநிலம் செல்ல திருப்பூர் இரயில் நிலையம் வந்துள்ளனர். இந்த நிலையில் இரயில் நிலையம் அருகில் புஸ்பா பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்து இருந்துள்ளனர்.

அப்போது அங்கு அறிமுகம் ஆன பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம், டானிஷ் மற்றும் முர்சித் என மூன்று வட மாநில இளைஞர்கள் அறிமுகம் ஆகி நாங்கள் வேலை பார...