இந்தியா, ஜனவரி 29 -- இந்து கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவிற்கு கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மிகவும் ருசியுடனும் இருக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கோயில்களில் சென்று பிரசாதம் வாங்கி சாப்பிடும் பழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. கோயில் பிரசாதத்தின் மீது அனைவரும் ஈர்க்கப்பட்டுள்ளனர். உலக அளவில் பிரசாதத்திற்கு பெயர் போன பல கோவில்கள் இந்தியாவில் உள்ளன. அந்த வரிசையில் முதன்மையாக இருப்பது திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு. திருப்பதியில் லட்டு என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பிரசாதமாகும். திருப்பதியில் செய்யப்படும் லட்டுக்கள் மிகவும் அதிக சுவையுடன் இருப்பது என்பது உண்மை. இந்த திருப்பதியில் வழங்கப்படும் லட்டு போன்றே நீங்களே உங்கள் வீட்டில் எளிமையாக செய்ய முடியும். அதிக ...