இந்தியா, ஜனவரி 27 -- மைசூரு: கர்நாடகா மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் மனிதனைக் கொல்லும் புலிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வனத்துறை ஊழியரின் மனைவியைக் கொன்று அவரது உடலின் பாகத்தை புலி சாப்பிட்டிருக்கிறது. புலியைப் பிடிக்கச் சென்ற அதிரடிப்படை வீரர்களையும் புலி தாக்கியிருக்கிறது. புலி அச்சுறுத்தல் காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புலியைக் கொல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள மனந்தவாடி நகர்ப்பகுதி மக்கள் இப்பகுதியில் வனவிலங்குகளின் அச்சுறுத்தலைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதுவும் கேரள வனத்துறை அமைச்சரின் காரை முற்றுகையிட்டு இந்தப் போராட்டத்தை செய்துள்ளனர். இதன் காரணமாக, மானந்தவாடி மற்றும...