இந்தியா, மார்ச் 22 -- Thug Life: தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரிலீஸுக்கான கவுன்ட் டவுனையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்துவருகின்றனர். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்கியுள்ளார்.

'தக் லைஃப்' படத்தின்மூலம் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளது, உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், மும்பையில் கோலோச...