இந்தியா, பிப்ரவரி 5 -- This Week OTT: இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாக உள்ளன. பல்வேறு ஜானர்களில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளன. இதனால் பல்வேறு தரப்பு மக்களும் இந்த வார ஓடிடி ரிலீஸை அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். அரசியல், கிரிக்கெட் என பல ஜானர்களின் ரசிகர்கள் புதுப் படங்களில் வருகைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் படங்கள், வெப் சீரிஸ் என 7 முக்கிய வெளியீடுகள் வெளிவர உள்ளன.

குளோபல் ஸ்டார் ராம்சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் இந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. சங்கராந்தி பண்டிகையின் போது ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த அரசியல் ஆக்‌ஷன் திரைப்படம், ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வரவுள்ளது...