இந்தியா, பிப்ரவரி 10 -- This Week OTT: பிப்ரவரி மாதம் தொடங்கினாலே காதலர்கள் தங்களது கொண்டாட்டத்திற்கு தயாராகிவிடுவர். அப்படி காதலர் வாரம் தொடங்கியுள்ள நிலையில் அவர்களின் பொன்னான நேரத்தில் பார்க்க சில ஜானர் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த வாரம் (பிப்ரவரி 10-15) மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அதில் பிளாக்பஸ்டர் திரைப்படமான மார்கோ அவற்றில் ஒன்று. இந்த தீவிர அதிரடி திரைப்படம் ஸ்ட்ரீமிங்கில் செல்ல தயாராக உள்ளது. அதே போல நட்சத்திர நாயகி நித்யா மேனன் நடித்த ரொமான்டிக் படமும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

மார்கோ பிப்ரவரி 14 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் நுழைய உள்ளது மார்கோ படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. உன்னி முகுந்தன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான...